பிள்ளைகளின் உடலில் வளர்ச்சி ரீதியிலான குறைபாடு இருக்குமானால் மருத்துவரே உடல் வளர்ச்சி யைத் தடுக்கும் ஹார்மோன் சுரப்புக்கான மாத்திரைகளை பரிந்துரைப்பார். ஆனால் பொதுவா கவே உயரத்தை அதிகரிக்கும் என்று சொல்லப்படும் மாத்திரைகள் உங்கள் பிள்ளைகளின் உயரத்தில் எந்தவிதமான மாற்றத்தையும் உண்டாக்காது.
தொடர்ந்து இத்தகைய மாத்திரைகள் உங்கள் உடலில் வேறுவிதமான ஆரோக்கிய குறைபாட் டையே உண்டாக்கும் என்று எச்சரிக்கிறார்கள் மருத்துவர்கள்.
தூக்கமின்மையும் உடற்பயிற்சியும்
தூக்கமின்மை பிரச்சனை இருப்பவர்களுக்கு உயரம் கூடுவதில் அதிக சிக்கல் இல்லை. ஆனால் தொடர்ந்து தூக்கத்தை இழக்கும் போது இது இந்த பிரச்சனை உண்டாக கூடும். ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கும் போது உடல் வளர்ச்சி ஹார்மோன் சுரப்பு அதிகரிக்கும். தூக்கமின்மை பிரச்சனையில் இந்த ஹார்மோன் சுரப்பு சரிவர இயங்காது.
உடற்பயிற்சி தொடர்ந்து செய்யும் போது உடல் வளர்த்தி உயரம் கூடும் என்று சொல்வார்கள். இவை ஓரளவு உண்மையே ஏனெனில் உடல் தசைகள், எலும்புகளை வலுப்படுத்துவதோடு உடல் எடையை யும் பராமரிக்க உதவுகிறது அன்றாடம் செய்யும் உடற்பயிற்சி. இவை உடல் உயரத்தை உறுதி செய் யும் ஹார்மோன் சுரப்பை ஊக்குவிக்கிறது. அதனால் தான் உடற்பயிற்சி செய்தால் உயரம் ஆகலாம் என்று சொல்கிறார்கள்.