வைகுண்ட ஏகாதசி தினத்தின் போது எப்படி விரதம் இருக்க வேண்டும். அவர்கள் துவாதசி தினத்தில் எப்படி விரதத்தை முடித்து பூஜை செய்ய வேண்டும் என்பதை விரிவாக பார்ப்போம்
வைகுண்ட ஏகாதசி திருநாளில் பெருமாள் சொர்க்க வாசல் வழியாக வெளியே வரும் காட்சியைப் பக்தர்கள் கண் குளிர கண்டு தரிப்பது வழக்கம்
வைகுண்ட ஏகாதசி என்பது ஒருநாள் தான் அதன் முன் வரும் பகல் பத்து, பின் வரும் இரா பத்து மிக விஷேசமானது. திருமங்கை ஆழ்வார் பெற்ற வரத்தின் படி, நாலாயிரம் திவ்யபிரபந்தத்தில் இருக்கும் பெரியாழ்வார் அருளிச்செய்திருக்கும் ஆயிரம் பாசுரங்கள் அமுதம் போன்றவை. இவற்றை நீங்கள் கேட்டு அருள வேண்டும் என வரம் கேட்டார்.
சரி என ஒப்புக்கொண்டு வரம் கொடுத்த பெருமாள், தினமும் 100 பாடல்கள் வீதம் பத்து நாட்கள் 1000 பாசுரங்களைக் கேட்பதாக அருளினார் அதற்கு இராபத்து என பெயர் வைத்தார். அதன் பின்னர் உன் மீது பாடப்பட்ட நாலாயிரம் திவ்யபிரபந்தங்களையும் கேட்டு அருள வேண்டும் என கேட்க, சரி சொல்ல இதை எப்படி கேட்க என நினைத்த பெருமாள் வைகுண்ட ஏகாதசிக்கு முன் பத்து நாட்கள் பகல் பத்து என பத்து நாட்களில் நம்மாழ்வாரின் பாசுரங்களை தவிர உள்ள பாசுரங்களை கேட்டு அருள்வதாக கூறினார்.