அந்த விடுகதையில் வரும் தட்டான் என்ற சொல் மஹாபலி சக்கரவர்த்தியைக் குறிப்பதாகும். தன்னிடம் தானம் கேட்டு வருகின்ற வறியவர்களுக்கு இல்லையென்று தட்டாமல் வழங்குபவர் தான் தட்டான் என்னும் மாபலி சக்கரவர்த்தி. அப்படிப்பட்ட தட்டானுக்கு சட்டை போடுவது என்றால். தானம் கொடுக்க நினைப்பவரினுடைய எண்ணத்தை தடுத்து நிறுத்த நினைப்பதாகும். அதாவது அவருடைய ஈகை உள்ளத்தை மற்றவருடைய தீய எண்ணத்தால் மறைக்க நினைப்பதாகும்
யார் அந்த குட்டைப்பையன்?
மஹாலி சக்கரவர்த்தி அசுவமேக யாகம் செய்து வந்தார். அப்போது 99 அசுவமேக யாகங்களை முடித்து விட்டு, 100 வது யாகம் செய்கின்ற பொழுது, பெருமாள் வாமன அவதாரம் எடுத்து வந்து மாபலி சக்கரவர்த்தியிடம் தானம் கேட்டு வந்து நின்றார். இப்போது புரிகிறதா? யார் அந்த குட்டைப்பையன் என்று. வாமன அவதாரம் எடுத்து வந்த பெருமாள் தான் குட்டைப் பையன். இந்த விடுகதையில் வரும் குட்டைப்பையன் என்பது வாமன அவதாரத்தையே குறிக்கிற